×

நீட் ஒரு நடுநிலையான தேர்வுமுறை அல்ல என்பது நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை மூலம் தெளிவாகிறது: மசோதா

சென்னை: நீட் ஒரு நடுநிலையான தேர்வுமுறை அல்ல என்பது நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை மூலம் தெளிவாகிறது என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களின் நம்பிக்கை, கனவை தகர்த்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் போன்ற சமூகத்தினருக்கு நீட் தேர்வு எதிரானது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தகுதி, தரத்தினை நீட் தேர்வு உறுதி செய்வதாக தெரியவில்லை என மசோதாவில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர மட்டுமே நீட் தேர்வு உதவியுள்ளது என மசோதாவில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்து மதிப்பிட்டுள்ளதாக நீதிபதி ராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்ற கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எதிராகவே நீட் தேர்வு இருந்து வருகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் நீட் தேர்வு எதிராகவே இருந்து வருகிறது.

Tags : Neit ,Rajan , NEET
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்