×

வேகமெடுக்கும் பணிகள்!: இமாச்சல், சிக்கிம் உள்பட 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 100% கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை..!!

டெல்லி: இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், கோவா ஆகிய மாநிலங்களும், லடாக், லட்சத்தீவுகள் தத்ரா நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களும் 100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளன. அதாவது அங்கெல்லாம் 18 வயது நிரம்பிய அனைவருமே குறைந்தது ஒரு தவணை கொரோனா தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது முதலே தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு முதலில் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவி வந்தாலும், கொரோனா கொல்லுயிரியை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என விஞ்ஞானிகள் தெரிவித்து வருவதால் அதனை தற்போது ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர்.

அதன்படி 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத தடுப்பூசி போட்டு சாதனை படைத்திருக்கிறது. நாடு முழுவதும் இதுவரை 74 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் கோவின் இணையதள தரவுகளின்படி நாடு முழுவதும் 50 லட்சத்து 25 ஆயிரத்து 159 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து துரிதப்படுத்தி வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.


Tags : Imachal ,Sikkim , Himachal, Sikkim, Union Territory, 100% Vaccinated
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...