×

ஜோகோவிச்சின் காலண்டர் ஸ்லாம் கனவு தகர்ந்தது: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் மெத்வதேவ்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மெத்வதேவ் கைப்பற்றினார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மெத்வதேவ் கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை 6-4,6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்.

இந்த ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வென்று 52 ஆண்டுகளுக்குப்பின் சாதனைப் படைப்பார் ஜோக்கோவிச் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைத் தவறவிட்டார். கடைசியாககடந்த 1969ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் ரோட் ரேவர் மட்டும்தான் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வென்றுள்ளார். பட்டம் வெல்வார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தோல்வியுற்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஜோகோவிச்சின் காலண்டர் ஸ்லாம் கனவு தகர்ந்தது.

பட்டம் வென்றுள்ள வீரர் மெத்வதேவ் முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றுள்ளார். மெத்வதேவ் பெற்றுள்ள வெற்றியால் 34 வயதான ஜோகோவிச்சின் காலண்டர் ஸ்லாம் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச்சுடன் மோதி அதில் தோல்வி அடைந்தார்மெத்வதேவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Djokovich ,Medvadev , Djokovic's calendar slam dream shattered: Medvedev wins championship
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்: 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்