மோடியை புகழ்ந்து தள்ளிய காங்கிரஸ் எம்எல்ஏ பாஜ.வுக்கு தாவல்

புதுடெல்லி: உத்தரகாண்டில் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ ராஜ்குமார், அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புரோலா சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார்.

இவர் சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி வந்தார். அவர் தலைமையிலான ஒன்றிய அரசு, கொரோனா சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கி வருகிறது, பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொண்டு வருகிறது என தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென பாஜ.வில் இணைந்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கட்சியின் மாநில தலைவர் மதன் கவுசிக் முன்னிலையில் அவர் பாஜவில் சேர்ந்தார். சமீபத்தில், இம்மாநில சுயேச்ச எம்எல்ஏ பிரிதாம் சிங் பன்வாரும் பாஜவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>