செம்பரம்பாக்கம் ஏரியில் விநாயகர் சிலையை கரைத்தவர் நீரில் மூழ்கி பலி

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த சம்பந்தம் நகர், 3வது தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (38). எலக்ட்ரிசீயன். இவர், நேற்று மாலை தனது இரண்டு பிள்ளைகளுடன், விநாயகர் சிலையை கரைக்க செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். பிள்ளைகள் இருவரையும் ஏரியின் 5-வது கண் மதகின் அருகே நிற்கவைத்து விட்டு, பாரதிராஜா மட்டும் ஏரியில் இறங்கி விநாயகர் சிலையை கரைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென நிலைதடுமாறிய பாரதிராஜா, விநாயகர் சிலையுடன் தண்ணீரில் கவிழ்ந்தார். நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கத் தொடங்கினார். இதனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அவரது பிள்ளைகள் அலறினார்கள். அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து பாரதிராஜாவை மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். குன்றத்தூர் போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: