திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: இன்று நடைபெறுகிறது; மாவட்ட பொறுப்பாளர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (13 ம் தேதி) மாலை 5 மணியளவில் பெருவாயில் மாவட்ட திமுக அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, க.சுந்தரம், இஏபி.சிவாஜி, சி.எச்.சேகர், பி.ஜெ.மூர்த்தி, தமிழன் இளங்கோவன்,  மு.பகலவன், கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, மு.கதிரவன், டாக்டர் பரிமளம், ஏ.நிலவழகன், மீ.வி.கோதண்டன், எம்.எல்.ரவி, பி.வெங்கடாஜலபதி, வெ.அன்புவாணன், கே.சுரேஷ், கே.சுப்பிரமணி, பா.செ.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

எனவே இந்தக் கூட்டத்தில் திமுக முப்பெரு விழாவில் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணுவிற்கு கலைஞர் விருது வழங்கிய திமுக தலைவர், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது குறித்தும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 20ம் தேதி வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>