×

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களில் 2208 பேர் நீட் தேர்வு எழுதினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த 6 மையங்களில் 2208 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு தேர்வு எழுதினர். இத்தேர்வில் 67 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு 2275 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இத்தேர்வுக்காக திருவள்ளூரில் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எம்.ஜெயின் வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காக்களூர் சிசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு மையங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற நீட் தேர்வுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலே மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் தேர்வு மையத்தில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணி முதல் மாணவ, மாணவிகளை வரிசையில் நிற்க வைத்து கடுமையான சோதனைக்கு பிறகு நுழைவுச் சீட்டினை சரிபார்த்து தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையில் நடைபெற்ற இத்தேர்வில் 2208 பேர் பங்கேற்றனர். இதில் 67 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tiruvallur district , In Tiruvallur district 2208 people wrote the NEED exam in 6 centers
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...