சோனியா தொகுதியில் பிரியங்கா காந்தி பயணம்

ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தொகுதியான ரேபரேலியில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை நேற்று தொடங்கினார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். சமீபத்தில் இம்மாநிலத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்று மீண்டும் 2 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

காங்கிரஸ் தலைவரும், தனது தாயுமான சோனியா காந்தியின் மக்களவை தொகுதியான அவர் பயணம் மேற்கொள்கிறார். நேற்று அங்கு சென்ற பிரியங்கா காந்திக்கு கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லக்னோ- ரேபரேலி எல்லையில் சுருவாவில் இருக்கும் அனுமன் கோயிலில் பிரியங்கா வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கட்சியின் பல்வேறு அமைப்புக்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், சமுதாயத்தில் பல்வேறு தரப்பு மக்களையும் அவர் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

Related Stories:

>