நீட் தேர்வு பயத்தால் தற்கொலை மாணவன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

சேலம்: நீட் தேர்வு பயத்தில் மேட்டூர் அருகே மாணவன் தனுஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாணவனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் அமைச்சர் செம்மலை, சந்திரசேகர் எம்பி, எம்எல்ஏக்கள் சதாசிவம், மணி உள்ளிட்டோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். நீட் தேர்வு அச்சத்தால் மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அவரது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

Related Stories:

More
>