பயிற்சி முடித்த 9 ஐபிஎஸ் அதிகாரிகள் ஏஎஸ்பியாக நியமனம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழக கேடரில், புதிதாக தேர்வாகி பயிற்சி முடித்த 9 ஐபிஎஸ் அதிகாரிகளை உள்துறை செயலாளர் பிரபாகர் ஏஎஸ்பியாக பணியமர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக கேடரில், 2018ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான சந்தீஷ் தூத்துக்குடி புறநகர் ஏஎஸ்பியாகவும், 2018ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ராஜ்த் ஆர்.சதுர்வேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஏஎஸ்பியாகவும், 2018ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ஹங்கித் ஜெயின் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஏஎஸ்பியாகவும், 2018ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான சாய் பிரணீத் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஏஎஸ்பியாகவும், 2019ம் ஆண்டு தேர்வான அபிஷேக் குப்தா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஏஎஸ்பியாகவும், 2019ம் ஆண்டு தேர்வான அருண் கபிலன் திண்டுக்கல் புறநகர் ஏஎஸ்பியாகவும், 2019ம் ஆண்டு தேர்வான கவுதம் கோயல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஏஎஸ்பியாகவும், 2019ம் ஆண்டு தேர்வாக ஸ்ரேயா குப்தா தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் ஏஎஸ்பியாகவும், 2019ம் ஆண்டு தேர்வான அரவிந்த் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏஎஸ்பியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

* 3 எஸ்பிக்கள் மாற்றம்

சென்னை மாநகர கிழக்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராகவும், திருப்பத்தூர் மாவட்டம் கண்காணிப்பாளராக இருந்த சிபி சக்கரவர்த்தி சென்னை சைபர் க்ரைம் பிரிவு கண்காணிப்பாளராகவும், சென்னை சைபர் க்ரைம் பிரிவு கண்காணிப்பாளராக இருந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>