மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் பாரதி சிலைக்கு மாலை மாலையணிவித்து மரியாதை

எட்டயபுரம்: தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் எட்டயபுரத்தில் பாரதி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையிலிருந்து இன்று காரில் தூத்துக்குடி வந்தார். அங்கு வஉசி கல்லூரியில் நடந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார். பின்னர் தூத்துக்குடியிலிருந்து எட்டயபுரம் சென்ற அவர் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து காரில் அருப்புக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய இணையமைச்சர் முருகன் மற்றும் பா.ஜ. பிரமுகர்கள் உடன் சென்றனர்.

Related Stories: