×

வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி சித்தரித்து பணம் பறிப்பு; இளம்பெண்களே உஷார்! மாநகர காவல் துறை எச்சரிக்கை

திருச்சி: வீடியோ அழைப்பின் மூலம் இளம்பெண்களை ஆபாசமாக காட்டி பணம் பறிக்கும் கும்பல் உள்ளதாகவும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேஸ்புக் மூலம் தொலைபேசி எண்களை எடுத்து வாட்ஸ் ஆப் கால் மூலம் இளம்பெண்களைப் போல இணையவழி குற்றவாளிகள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் வீடியோ கால் மூலம் ஆபாசமாக சித்தரித்து ரசிக்க வைக்கிறார்கள். பின்பு உணர்ச்சிகளைத் தூண்ட செய்து சம்பந்தப்பட்ட நபரையும் ஆபாசமாக பதிவு செய்து கொள்கிறார்கள்.

பின்னர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து, நீங்கள் ஒரு இளம்பெண்ணுடன் உள்ள பதிவு எங்களிடம் உள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம். அப்படி செய்யாமல் இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்புங்கள் என்று கூறி மிரட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட நபர் நம்பவில்லை என்றால், இளம்பெண்ணுடன் இருப்பது போல் போலியான ஒரு வீடியோ பதிவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவார்கள். அல்லது நீங்கள் அழைப்பை ஏற்ற சில வினாடிக்குள் நீங்கள் சுதாரிப்பதற்குள் உங்களது முகத்துடன் கூடிய ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவார்கள். அந்த நபர் தன்மானம் கருதி கேட்ட பணத்தை அனுப்பிவிட கூடும்.

இதேபோல் அடிக்கடி மிரட்டி பணம் பறிக்க முயல்வார்கள். சில சமயங்களில் அவர்களின் அழுத்தம் காரணமாக விபரீத முடிவிற்கும் தள்ளப்படுவதும் உண்டு. இதேபோல் பல இளைஞர்கள் அவர்களின் பார்வையில் மாட்டிக்கொண்டு தவித்து பணத்தையும் நிம்மதியும் இழக்கிறார்கள். நவீன தொழில்நுட்பங்கள் அதிகம் வந்துவிட்டதால் மோசடி ஆசாமிகள் புதுப்புது உத்திகளை கையாண்டு வருகின்றனர். எனவே சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் ப்ரொபைலில் தங்களது சுய விவரங்களை குறிக்கும்போது தயவுசெய்து செல்போன் எண் புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பதிவிட வேண்டாம். தெரியாத எண்ணில் வரும் அழைப்பை தொடர வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ் பதிவிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாநகர காவல், எச்சரிக்கை! வீடியோ அழைப்பின் மூலம் ஆபாச வீடியோக்கள் காட்டி பணம் பறிக்கும் கும்பல், சைபர் குற்றங்களை பற்றி இணையவழியில் புகார் தெரிவிக்க https://www.cybercrime.gov.in/ என்ற வலைதளத்தை தொடரவும். சைபர் க்ரைம் உதவி எண் 155260 என பதிவிடப்பட்டுள்ளது.

Tags : Municipal Police Department , Video showing pornography on foot and money laundering; Young girls, be careful! Metropolitan Police Department alert
× RELATED பெசன்ட் நகரில் நாளை நடைபெறும்: அன்னை...