திருவண்டார்கோவில்- கொத்தபுரிநத்தம் சாலையை சீரமைக்க கோரிக்கை

திருபுவனை: புதுச்சேரி மாநிலம், திருவண்டார்கோவில் முதல் கொத்தபுரிநத்தம் வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. திருபுவனை தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. இந்த சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடும் நிலையும் இருந்து வருகிறது.

சாலை அமைக்கும் பணி தொடங்கப்போவதாக பொதுப்பணித் துறையின் மூலம் அறிவிப்பு பலகை வைத்து பல நாட்கள் ஆகியும் இதுவரையும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>