×

வேலூரில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைக்கும் சதுப்பேரியில் சுகாதார சீர்கேடு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்:  வேலூர் மாநகராட்சியில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைக்கும் சதுப்பேரி சுகாதார சீர்கேட்டுடன் காட்சியளிக்கிறது. எனவே, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் பொது இடங்களில் பல்வேறு வடிவங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்து வழக்கம். 3 அல்லது 5 நாட்களுக்கு பிறகு போலீசாரின் வழிகாட்டுதலின்பேரின் விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்படும்.

ஆனால், இந்தாண்டு கொரோனா காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.  கடந்தாண்டு, வேலூர் மாநகராட்சி பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க 4 நீர் நிலைகள் தயார் செய்யப்பட்டது. ஆனால், இந்தாண்டு விநாயகர் சிலைகள் கரைக்க ஏதுவாக சதுப்பேரியில் சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை.

இதனால், சதுப்பேரியில் தண்ணீரில் பாசி படர்ந்தும், ஆகாயதாமரை செடிகள் அகற்றாமலும் பிளாஸ்டிக் பொருட்களுடன் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்காமல் பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்தது. எனவே, விநாயகர் சிலைகளை கரைக்கும் பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vallur , Sanitary disorder in the swamp where Ganesha idols are kept in houses in Vellore: Corporation demands action
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்