×

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கொட்டிக்கிடக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

கரூர்: கரூரில் ரூ.125 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே நோய்த்தொற்றை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி தமிழகத்தின் இருபத்தி மூன்றாவது கல்லூரி ஆகும். இக் கல்லூரியானது சுமார் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 295 கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த கால ஆட்சியில் 5.3.2020 ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் 150 மாணவ, மாணவியர் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்கும் வசதி உடையது. மேலும் மருத்துவமனையில் 880 படுக்கை வசதி உள்ளது. மருத்துவமனையில் அனைத்து வசதிகள் அமைந்துள்ளது. மேலும் பெரிய அளவில் வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக பல வழிகள் உள்ளது. கரூர் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது.

தற்போது உள்ள மருத்துவமனை சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு மீதி உள்ள7.45 ஏக்கர் நிலம் மருத்துவ மனையின் மேல் புறத்தில் காலியாக உள்ளது. இந்த காலி இடத்தில் கரூரின் பல்வேறு பகுதியில் உள்ள வீட்டுக் கழிவுகள் ,நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கோழி கழிவுகள், குப்பைகள் கழிவுகளை மலைபோல் குவித்துள்ளனர். இதில் ஏராளமான கருவேலமரங்கள் சீத்த மரங்கள், பரந்து விரிந்து காடு போல் காட்சியளிக்கிறது. இந்த மருத்துவமனைக்கு தினசரி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இவர்கள் அனைவரும் உ பய உணர்வோடு வந்து செல்கின்றனர். எங்கு பார்த்தாலும் தெருநாய்கள் ஒன்றோடு வந்து சுற்றிக் கொண்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் காணப்படுகின்றன. பல நேரங்களில் நாய் கடியால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மருத்துவக் கல்லூரி அருகில் கொட்டப்படும் குப்பைகளை வேறு இடத்திற்கு அகற்றி சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள அந்த இடத்தை மைதானமாக மாற்றியமைத்து மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் விளையாட்டு மைதானமாக மாற்றி அமைக்கலாம். அல்லது பெரிய பூங்கா அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தக்கவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Government , Infectious rubbish dumped near Karur Government Medical College should be removed: Public demand
× RELATED 29 பயனாளிகளுக்கு A7.99 லட்சத்தில்...