×

நெறிகாட்டு வழிமுறைகளை விமானி பின்பற்றாததே விபத்துக்கு காரணம்: 2020 ஆகஸ்ட் கோழிக்கோடு விமான விபத்து விசாரணை அறிக்கை வெளியீடு

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த விமான விபத்துக்கு விமான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததே காரணம் என இறுதி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இடையே துபாயில் சிக்கி தவித்த 190 இந்தியர்களுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் நோக்கி வந்த போது இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. table talk runway என்றதாலும் விமானத்தை தரையிறக்க முடியாமல் வானில் வட்டமிட்டு விமானி இறுதியாக விமானத்தை தரையிறக்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகி சென்று கோர விபத்து ஏற்பட்டது. இதில் விமானி உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை விமான விபத்து விசாரணை புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில்; நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே விபத்துக்கு காரணம். விமானத்தை அருகில் உள்ள விமான நிலையத்திற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் விமானி அதை செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை புறக்கணித்துவிட முடியாது என்பதை தெரிவித்துள்ளது.


Tags : The cause of the accident was the pilot's failure to follow the guidelines: August 2020 Kozhikode plane crash investigation report released
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...