பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்: முதல்வர் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

சென்னை:   அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள் மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்று. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகத்தை மாணவ, மாணவியருக்கு வழங்குதல், பாரதியின் உருவ சிலைகள், உருவம் பொறித்த கலை பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தல், திரையில் பாரதி என்ற நிகழ்வினை நடத்துதல் உள்ளிட்ட 14 அறிவிப்புகளை முதல்வர் அறிவித்திருக்கிறார். இதை, அதிமுக சார்பில் வரவேற்பதோடு, முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

முத்தரசன் (இந்திய கம்யூ. மாநில செயலாளர்): செப்டம்பர் 11ம் நாள் ‘மகாகவி நாள்’ என தமிழ்நாடு அரசு கடைப்பிடிக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரிகளில் மகாகவி பாரதி குறித்த கவிதை போட்டி நடத்தி ‘பாரதி இளம் கவிஞர்’ விருது வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது நல்ல நடவடிக்கை. . பாரதியின் வாழ்க்கை செய்தியை வரலாறு நெடுகிலும் நிலைநிறுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

Related Stories: