தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப்பெற எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை:  எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை:  தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது முதல் ,தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் தலையீடு, அவரின் தன்னிச்சையான நியமனங்கள் போன்றவை தமிழகத்தில் நிலவிய இரட்டை நிர்வாகத்தை வெளிப்படையாக காட்டின. நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டிருப்பது நாகாலாந்தில் பலருக்கு நிம்மதியை தந்துள்ளது என நாகாலாந்தின் பாஜ அங்கம் வகிக்கும் கூட்டணி அரசிற்கு தலைமை தாங்கும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்.டி.பி.பி) தெரிவித்துள்ளது.

அவரின் ஜனநாயக பூர்வமற்ற செயல்பாடு அங்கு எந்த அளவிற்கு அமைந்திருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆகவே, தனது ஜனநாயகபூர்வமற்ற செயல்பாடுகளால் நாகாலாந்து மக்களாலும், அங்குள்ள அரசியல் கட்சிகளாலும் வெறுக்கப்பட்ட அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தின் ஆளுநராக நியமித்திருப்பதை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.

Related Stories: