பேராசிரியர் முஸ்டாக் அகமத் தகவல்: அரசு யுனானி மருத்துவக்கல்லூரி சார்பில் ஓராண்டுக்கு மருத்துவ முகாம்

சென்னை: சென்னை  அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அரசு யுனானி  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 75வது சுதந்திர தினத்தை  சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட்  மாதம் 15ம் தேதி வரை ஒரு வருட காலத்திற்கு சுதந்திரத்தின் அம்ரித் திருவிழா நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அதன்படி, அரும்பாக்கம் அரசு  சித்த மருத்துவமனை வளாகத்தில் முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், இணை இயக்குநர் பார்த்திபன் ஆகியோர் தொடங்கி

வைத்தனர்.

இதுகுறித்து யுனானி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் முஸ்டாக் அகமத் கூறியதாவது: 75வது  சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் யுனானி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் 2022 ஆகஸ்ட் 15ம் தேதி வரை 1 வருட காலத்திற்கு மரக்கன்றுகள் வழங்குதல், மருத்துவ ஆலோசனை வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>