×

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.  

இதனையெடுத்து தாம்பரம், அதன் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது புதிய மாநகராட்சிக்கான எல்லையை வரையறை செய்து, புதிதாக வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மாநகராட்சிக்கு தேவையான அனைத்து ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே எல்லை வரையறை செய்து வரைபடம் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ,தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளை இணைத்து அரசாணை வெளியீடு. சிட்லபாக்கம்,மாடம்பாக்கம்,பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க ஆணை. மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9,60,887 ஆக இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Tambaram Corporation , Tambaram Corporation, Government, Government of Tamil Nadu
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...