தேமுதிக தலைமைக்கழக பேச்சாளர் விபத்தில் பலி

சென்னை: தேமுதிக தலைமைக்கழக பேச்சாளர் சாலை விபத்தில் பலியானார்.  சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையை சேர்ந்தவர் செல்வதாசன் (49). இவர், தே.மு.தி.க. கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்துவந்தார். மேலும் அந்தமான், ராமநாதபுரம், பாதி உனக்கு பாதி எனக்கு  என்பது உள்ளிட்ட  சினிமா படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். தேமுதிக கட்சிக்கு தேர்தல் நேரங்களில் பல்வேறு பாடல் அடங்கிய குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார்.செல்வதாசன், நேற்று மாலை நொளம்பூர் பாடசாலை அருகே தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவருடன் வந்த நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்வதாசனை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.

Related Stories:

More
>