×

பொதுப்பணி, நீர்வளத்துறையில் 36 அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பிரகாசம் சென்னை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், சென்னை திட்டம் மற்றும் வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம் வேலூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கும், சென்னை கட்டுமான பிரிவு இணை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி மதுரை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கும், திருச்சி மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் இளஞ்செழியன் சென்னை கட்டுமான பராமரிப்பு பிரிவு இணை தலைமை பொறியாளராகவும், கடலூர் வெள்ளாறு வடிநில கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர் திருச்சி மருத்துவ கட்டுமான பிரிவுக்கும், ஈரோடு பவானி வடிநில கண்காணிப்பு பொறியாளர் காசிலிங்கம் கோவை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கும் திருச்சி எலக்ட்ரிக்கல் பிரிவு இணை தலைமை பொறியாளர் தில்லைக்கரசி சென்னை எலக்ட்ரிக்கல் பிரிவு இணை தலைமை பொறியாளராகவும், சென்னை எலக்ட்ரிக்கல் பிரிவு இணை தலைமை பொறியாளர் சத்தியநாராயணன் திருச்சி எலக்ட்ரிக்கல் பிரிவு இணை தலைமை பொறியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள்.

அதேபோன்று கோவை நீர்வளப்பிரிவு துணை தலைமை பொறியாளர் அய்யாச்சாமி மதுரை மருத்துவ கட்டுமான பிரிவு செயற்பொறியாளராகவும், ஈரோடு பவானி வடிநில துணை தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஈரோடு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கும், மதுரை கனிமங்கள் மற்றும் கண்காணிப்பு செயற்பொறியாளர் பிரன் திருநெல்வேலி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கும், கடலூர் வெள்ளாறு வடிநில துணை தலைமை பொறியாளர் சிவக்குமார் வடமாநில கோட்ட செயற்பொறியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

சென்னை மருத்துவ கட்டுமான பிரிவு கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் திருச்சி மருத்துவ கட்டுமான பிரிவு கோட்டத்துக்கும், திருச்சி மருத்துவ கட்டுமான பிரிவு கோட்ட செயற்பொறியாளர் நித்யானந்தன் நாமக்கல் கட்டுமானம், பராமரிப்பு பிரிவு கோட்டத்துக்கும், சிவகங்கை கட்டுமானம், பராமரிப்பு பிரிவு கோட்ட செயற்பொறியாளர் சங்கரலிங்கம் திருநெல்வேலி மருத்துவ கட்டுமான பிரிவு கோட்டத்துக்கும், சென்னை அறநிலையத்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி திருப்பூர் மருத்துவ கட்டுமான பிரிவு கோட்டத்துக்கும், பழனி தண்டாயுதபாணி செயற்பொறியாளர் வெங்கடேசன் தேனி கட்டுமானம், பராமரிப்பு பிரிவு கோட்டத்துக்கும், சென்னை மருத்துவ கட்டுமான பிரிவு கோட்ட செயற்பொறியாளர் முத்தமிழ் அரசு சென்னை கட்டுமானம் கோட்டத்துக்கும், சென்னை கட்டுமான கோட்ட செயற்பொறியாளர் செல்வராஜன் சென்னை மருத்துவ கட்டுமான கோட்டத்துக்கும் என மொத்தம் 26 செயற்பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Public Works and ,Water Resources Department ,Government of Tamil Nadu , Public Works Officers, Government of Tamil Nadu, Action
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...