பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தங்க காசு, வெள்ளி விளக்கு பரிசு

பவானி: பவானி தொகுதிக்குட்பட்ட 151 மையங்களில் இன்று நடைபெறும் மெகா கொரோனா தடுப்பு முகாமில் தடுப்புபூசி போட்டுக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தங்கக் காசு, வெள்ளி விளக்கு, புடவைகள், வேட்டிகள் பரிசாகள் வழங்கப்படும் என வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் கூறியதாவது: பவானி சட்டமன்றத் தொகுதியில் பவானி வட்டாரத்தில் 86 மையங்கள், அம்மாபேட்டை வட்டாரத்தில் 65 மையங்கள் என 151 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பங்கேற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசு ஒரு கிராம் தங்கக் காசு 2 பேருக்கும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்கு ஒருவருக்கும்,  மூன்றாம் பரிசாக ரூ.500 மதிப்புள்ள புடவைகள், ரூ.500 மதிப்புள்ள வேட்டிகள் தலா 5 பேருக்கும் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 3  பேருக்கு தலா ரூ.300 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும். இத்திட்டம், பவானி, அம்மாபேட்டை பகுதிகளைச் சேர்ந்த பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>