ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம்: முதல்வரின் அறிவிப்புக்கு பணியாளர் நலச்சங்கம் வரவேற்பு

சென்னை: ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பணியாளர் நலச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் தலைவர் மணிமொழி, பொது செயலாளர் டாக்டர் டி.மகிமை தாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைககளை பாதுகாக்க தமிழ்நாடு ஆதிராவிடர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். இதுதொடர்பான சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தொழில்நுட்பக்கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர்கள் நலச்சங்கம் நன்றியை தெரிவித்து கொள்கிறது. 175வது ஆண்டு விழாவின் நினைவாக பன்முக ஆற்றல் கொண்ட பூர்வத்தமிழர் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க ஏதுவாக கூடுதல் நீதிமன்றங்களை சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலியில் அமைக்கப்படும் என்கிற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பையும் வரவேற்று பாராட்டுகிறது.

Related Stories:

>