×

தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி: முதல்வர் உத்தரவால் ஓமன் நாட்டில் இருந்து மீட்பு

சென்னை: திருப்பூரை சேர்ந்தவர் சேர்ந்தவர் தினேஷ்பாபு(26). ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றிருந்தார். அங்கு, அவர் அதிகமான பணி மற்றும் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டார். இதனால் தன்னை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள், வேலை வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு ஒப்பந்த நிறுவனம்,  ஒப்பந்த காலம் முடியும் முன்பு அனுப்ப முடியாது என்று கூறி, பாஸ்போர்ட்டை பறித்து கொண்டது. இதையடுத்து தினேஷ்பாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓமன் நாட்டில் தான் பணியாற்றிக்கொண்டிருந்த மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் தினேஷ் பாபு படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதற்கிடையே தினேஷ் பாபு குடும்பத்தினர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு  தகவல் தெரிவித்து, தினேஷ் பாபுவை இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையரக அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்தனர். அதோடு ஓமன் நாட்டில் வசிக்கும் தமிழர் நல சங்கத்தினரும் அதற்கான முயற்சி எடுத்தனர்.
ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிலிருந்து நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு  சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில், தினேஷ் பாபு, ஸ்ட்ரேச்சர் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அதோடு, அவர் இருந்த சூழ்நிலை காரணமாக, உடனடியாக சென்னை விமான நிலையத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம்,சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : First Minister ,Oman , Worker, recovery
× RELATED யுஏஇ, ஓமனில் கனமழை: 18 பேர் பலி