லோக் அதாலத்தில் 369 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு

தாம்பரம்: தாம்பரம் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தலைமையில், தேசிய லோக் அதாலத் நேற்று நடைபெற்றது. இதில், மாஜிஸ்திரேட் சகானா மற்றும் அனுபிரியா முன்னிலையில் சொத்து தகராறு, நில பிரச்னை உள்ளிட்ட 610 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 369 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.  இந்த வழக்குகள் தொடர்பாக, சுமார் 23 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு செட்டில்மென்ட்டாக கொடுக்கப்பட்டது.

Related Stories: