×

கேஆர்பி அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி அணை சுற்றுவட்டார பகுதிகளிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2ம் தேதி 47.95 அடியாக இருந்த நீர்மட்டம், 10 நாளில் படிப்படியாக உயர்ந்து, நேற்று காலை 50 அடியை எட்டியது. தற்போது அணையின் மொத்த உயரமான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு 417 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி, எந்த நேரத்திலும் தண்ணீர் வெளியேற்றப்படும் என்பதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு, பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர்வரத்து 417 கனஅடியாக உள்ளது.

Tags : KRP Dam
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...