அரியானாவில் நடத்தப்பட்ட தடியடி பற்றி நீதிபதி விசாரணைக்கு உத்தரவு: விவசாயிகள் போராட்டம் வாபஸ்

சண்டிகர்: அரியானாவின் கர்னால் மாவட்டத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதலின் போது அவர்களின் மண்டையை உடைக்கும்படி, இம்மாவட்ட கலெக்டர் ஆயுஷ் சின்கா உத்தரவிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கும்படி, கர்னால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த 4 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இம்மாநில கூடுதல் செயலாளர் தேவேந்தர் சிங் நேற்று கூறுகையில், ``விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும், இது, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரையில் ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்கா கட்டாய விடுப்பில் இருப்பார். சம்பவத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு அரசு பணி வழங்கப்படும்,’’ என்றார். இதையடுத்து, விவசாயிகள் தங்களின் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: