பாரதி பிறந்தநாளை சாதி ஒழிப்பு நாளாக அறிவிக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலினுக்கு பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை

சென்னை : பாரதி பிறந்தநாளை சாதி ஒழிப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று (செப்.11) அவரின் நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினம் இனி மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.இந்நிலையில், சென்னை, மெரினா காமராசர் சாலையில் உள்ள பாரதியாரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பாரதி நினைவு நாளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில்,”விடுதலை தீயில் வெந்து எழுந்தவன், வீரம் மிக்க கவிஞன்,பாரதி பிறந்தநாள்- இனி மகா கவி நாள் ; சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்கிய அவன் பிறந்த நாளை, தளபதி அவர்களே!”சாதி ஒழிப்பு நாளாக”அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில்உறுதி மொழி எடுக்க உத்தரவிட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>