வைகைக் கரையில் சங்க பூங்கா அமைக்கப்படும் : மதுரை எம்.பி. வெங்கடேசன்

மதுரை : வைகைக் கரையில் சங்க பூங்கா அமைக்கப்படும் என மதுரை எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை கரையோரம் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள் குறித்து செல்லூர், ஆழ்வார்புரம், ராமராயர் மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செல்லூர் ஆழ்வார்புரம், ராமராயர் மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். இவற்றில் இரண்டு இடங்களில் மதுரை குறித்த சங்கப்பாடல்கள் காட்சிப்படுத்தும் வகையில் சங்கம் அமைப்பதற்கான திட்டமும், இரண்டு இடங்களில் இளைஞர்களுக்கான திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம் அமைப்பதற்கான தினமும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம்.

தொடர்ச்சியாக வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழு கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும். உடன் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் விஜயராஜன், செயற்குழு உறுப்பினர்கள் லெனின், நரசிம்மன் மற்றும் பகுதி குழு செயலாளர் லெனின், ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>