அவிநாசி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருப்பூர்: அவிநாசி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 உதவியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் மருத்துவ பணிகள் தொடரும் என்று குடும்ப நலத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Related Stories:

>