×

நாடு முழுவதும் மனநல மருத்துவமனைகளை அதிகப்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

மதுரை: இந்தியாவில் மனநலம் சார்ந்த பிரச்சனையால் அதிக பேர் பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் அளித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள நிலையில் 136 கோடி மக்களுக்கு நாட்டில் 47 அரசு மருத்துவமனைகள் போதுமானதல்ல. மனநல சுகாதார சட்டப்படி மனநல சிகிச்சை காப்பீட்டு திட்டத்தில் இருக்க வேண்டும்  என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  சாதாரண மக்களும் காப்பீடு மூலம் மனநல சிகிச்சை பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். மனநல சிகிச்சை திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிப்பதற்கு சிறைகளில் வசதி ஏற்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags : High Court , Psychiatric Hospital
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...