×

பத்திரப்பதிவில் முறைகேட்டில் ஈடுபவர்களை 3 ஆண்டுகள் சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவரப்படும் : அமைச்சர் மூர்த்தி பேட்டி!!

மதுரை : பத்திரப்பதிவில் முறைகேட்டில் ஈடுபவர்களை 3 ஆண்டுகள் சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் தெரிவித்தார்.பாரதியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாரதியாரின் பணிகளை தியாகத்தை பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.மாணவர்களிடம் பாரதியாரின் கவிதைகளை ஒப்புவிக்கும் பழக்கம் இருந்து கொண்டு இருக்கிறது. இதில் திறமையான கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ரூ.3 லட்சம் வரை தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.

பதிவுத் துறையைப் பொறுத்தவரையில் புதிய வணிகர்களாக இருந்தாலும் சரி தனியார் மற்றும் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி, கடன் பெற நேரடியாக பதிவு அலுவலகம் செல்ல வேண்டியது இருந்தது. அது இனிமேல் செல்ல வேண்டியது அவசியம் இல்லை. வங்கிகளில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் பதிவு அலுவலகம் மூலம் பதிவு அலுவலகத்தில் முறைகேடாக பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, மனைகள் விளை நிலங்களாகும், விளை நிலங்கள் மனை நிலங்களாகவும் அரசு வழிகாட்டு விதிமுறைகளை மீறி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் தெருவுக்கு தெரு வழிகாட்டி மதிப்பீடு வேறுபடுகிறது. இது சரி செய்யப்படும். பதிவு துறையில் தவறு நடக்கும் பட்சத்தில் சார்-பதிவாளர் மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட பிற ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தவறு செய்திருப்பது உறுதியாக தெரிந்தால் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறும் வகையில் ஆளுநர் வழியாக ஜனாதிபதிக்கு ஒப்புதல் அனுப்பி தண்டனை விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Moorthy , அமைச்சர் பி.மூர்த்தி
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...