வழக்கறிஞர் மீது பொய் வழக்கு - டிஎஸ்பி ஆஜராக உத்தரவு

திருவாடனை: வழக்கறிஞர் மீது பொய் வழக்கு பதியப்பட்டது தொடர்பாக திருவாடனை டிஎஸ்பி உட்பட 6 போலீசார் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாடனை டிஎஸ்பியாக இருந்த புகழேந்தி கணேஷ் தற்போது அரக்கோணம் டிஎஸ்பியாக உள்ளார். திருவாடனை டிஎஸ்பி உள்ளிட்ட 6 போலீசாரை நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் அளித்த புகாரின் பேரில் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 6 போலீசாரும் 16ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: