×

அறுவடைக்கு தயாரான நிலையில் 60 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி நாசம்: விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த 60 ஏக்கர் நெற்பயிர், மழைநீரில் மூழ்கி முழுவதுமாக நாசமானது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த  கொண்டமங்கலம் கிராமத்தில் 150 ஏக்கரில் நெல் பயிர், விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, இப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக 150 ஏக்கரில் நடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில், சுமார் 60 ஏக்கர் பயிர்கள், மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ள இந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடும் மன உளைச்சர் அடைந்துள்ளனர்.

 ஏக்கருக்குரூ.30 ஆயிரம் முதல்ரூ.45 ஆயிரம் வரை கடன் மற்றும் நகைகளை அடகு வைத்து, செலவு செய்து பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுபோல, இப்பகுதியை சுற்றியுள்ள கருநிலம், அனுமந்தபுரம், கரும்பூர் களிவந்தபட்டு, மருதேரி, கொட்டமேடு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதற்கு தீர்வு மற்றும் உரிய இழப்பீடு வழங்க அரசு முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Harvest, paddy, farmers suffering
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு