கர்நாடகாவில் அதிர்ச்சி 100 தெரு நாய்கள் கொன்று புதைப்பு

ஷிவமோகா: கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சமீபத்தில் 150 குரங்குகள் கொல்லப்பட்ட விவகாரம், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், ஷிவமோகா மாவட்டம், பத்ராவதி தாலுகாவில் உள்ள ரங்கநாதபுரா கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக ஷிவமோகா விலங்குகள் மீட்பு குழுவினர் அங்கு சென்று போலீஸ் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஏராளமான தெரு நாய்கள் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், சில நாய்கள் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதாகவும் கால்நடை மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மருத்துவ அறிக்கைகள் வெளியான பிறகு இச்சம்பவத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.

Related Stories:

>