×

கொரோனாவை ஒழிக்க சிகப்பு எறும்பு சட்னி: உச்ச நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி

புதுடெல்லி:  கொரோனாவை ஒழிப்பதற்கு மக்கள் தங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப, விதவிதமான நாட்டு மருந்து சிகிச்சைகளை எடுத்து கொள்கின்றனர்.  ஒடிசா, சட்டீஸ்கர் மாநிலங்களில் வாழும்  பழங்குடி மக்கள், சிகப்பு எறும்புகளை பிடித்து, பச்சை மிளகாயை சேர்த்து சட்னி போல் அரைத்து சாப்பிடுகின்றனர். இதை பார்த்த  ஒடிசா மாநில இன்ஜினியர் ஒருவர், ‘சிகப்பு எறும்பு சட்னியில் இரும்புச் சத்து, கால்சியம், துத்தநாகம் உட்பட பல்வேறு சத்துகள் உள்ளதால், இதை  கொரோனாவை கட்டுப்படுத்தும்  மருந்தாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும்,’ என தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற  நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‘கொரோனாவை ஒழிப்பதற்கு பல்வேறு பாரம்பரிய மருந்துகள் உள்ளன. அதனால், சிகப்பு எறும்பு சட்னியை மருந்தாக பயன்படுத்த உத்தரவிட முடியாது,’ என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Supreme Court , Corona, Fair Ant Chutney, Supreme Court,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...