குடிநீர் குழாய் வசதியும் ஆதாருடன் இணைப்பு: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து விதமான நீர் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் நோக்கத்தில், கடந்த 2019ம் ஆண்டு  ஜல் ஜீவன் அமைச்சகத்தை மோடி அரசு உருவாக்கியது. இந்நிலையில், தேசிய ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின் இயக்குனரும், கூடுதல் செயலருமான பாரத் லால், தனது துறையின் `ஜல் ஜீவன் சம்வாத்’ என்ற மாதாந்திர பத்திரிகையில் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘நாடு முழுவதும் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்புகள், குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், இணைய சேவை சென்சார் கருவிகள் மூலமாக, வீடுகளில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பது தானியங்கி முறையில் கணக்கிடப்படும். கடந்த 2 ஆண்டுகளில் குடிநீர் குழாய் இணைப்பு கோரி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 9ல் இருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது,’ என கூறியுள்ளார்.

Related Stories:

More
>