டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் ரவி ராம்பால்

ஜமைக்கா: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில், வேகப் பந்துவீச்சாளர் ரவி ராம்பால் (36 வயது) சுமார் 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்துள்ளார். ஆல் ரவுண்டர் சுனில் நரைன் தேர்வு செய்யப்படவில்லை. மற்றொரு ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் மாற்று வீரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்: கெய்ரன் போலார்டு (கேப்டன்), நிகோலஸ் பூரன், பேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆந்த்ரே பிளெட்சர், கிறிஸ் கேல், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லூயிஸ், ஒபெத் மெக்காய், ரவி ராம்பால், ஆந்த்ரே ரஸ்ஸல், லெண்டில் சிம்மன்ஸ், ஒஷேன் தாமஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர். மாற்று வீரர்கள்: ஜேசன் ஹோல்டர், அகீல் உசேன், ஷெல்டன் காட்ரெல், டேரன் பிராவோ.

வங்கதேச அணி அறிவிப்பு

உலக கோப்பை டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிம் இக்பால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தைஜுல் இஸ்லாம், மொசாடெக் உசேன் தேர்வு செய்யப்படவில்லை.

வங்கதேசம்: மகமதுல்லா (கேப்டன்), முகமது நயிம், சவும்ய சர்கார், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரகிம், அபிப் உசேன், நூருல் ஹாசன், மெகதி ஹாசன், நசும் அகமது, முஸ்டாபிசுர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, முகமது சைபுதின், ஷமிம் உசேன்.

மாற்று வீரர்கள்: அமினுல் இஸ்லாம், ருபெல் உசேன்.

Related Stories:

>