உள்ளாட்சித் தேர்தல் மநீம வேட்பாளர் தேர்வு குழு அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சி அமைப்பு களுக்கு, விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்த சமயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும்பொருட்டு மாநில தலைமைப் பணிக் குழு மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்குமான மாவட்ட வேட்பாளர் தேர்வுக் குழுவை அறிவிக்கிறேன்.

அதன் விவரம்:

மாநில தலைமை பணிக் குழு: ஏ.ஜி.மவுரியா - துணைத் தலைவர், தங்கவேலு - துணைத் தலைவர், ஸ்ரீபிரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர், சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர், செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர், சரத்பாபு ஏழுமலை - மாநிலச் செயலாளர்.

Related Stories:

>