×

வரும் 22ல் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்..!

டெல்லி: செப்டம்பர் 22ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். 2014ம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றார். அந்த ஆண்டின் ஜுன் 15 முதல் 2019ம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதில், 2014ம் ஆண்டு 9 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி 2015 ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும், 2016ம் ஆண்டு 17 நாடுகளுக்கும் அடுத்த ஆண்டுகளில் 14 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

கடந்த, 2017-ம் ஆண்டு 14 வெளிநாட்டு பயணங்களும், 2018-ம் ஆண்டு 23 வெளிநாட்டு பயணங்களும், 2019-ம் ஆண்டு 15 வெளிநாட்டு பயணங்களும் மேற்கொண்டுள்ளார். 1 முறை 35 நாடுகளுக்கும், 2 முறை 15 நாடுகளுக்கும், 3 முறை 2 நாடுகளுக்கும், 4 முறை 4 நாடுகளுக்கும், 5 முறை 3 நாடுகளுக்கும், 6 முறை 1 நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 22ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி வரும் 23ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவுடனான எல்லை பிரச்னை உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்கிறார். செப்டம்பர் 24ம் தேதி  ஜப்பான், ஆஸ்திரேலிய நாட்டு தலைவர்களையும் ரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார்.

Tags : United States ,PM ,Modi ,US President Joe Biden , PM Modi to visit US on July 22: US President Joe Biden to discuss various issues ..!
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்