மனைவியை பிரிந்த 24 மணி நேரத்தில் ஷிகார் தவானுக்கு அடுத்த சோகம்

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். 35 வயதான இவர், மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார். இதன் மூலம் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண பந்தம் முறிந்துள்ளது. இந்த தகவலை ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் உறுதி செய்தார். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஷிகார் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

மூத்த வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்றாலும் டி20 தொடரை இழந்தது. டி20 உலக கோப்பை முன் இந்திய அணியின் கடைசி டி20 தொடராக இது அமைந்தது. இந்த தொடருக்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ஷிகார் தவானுக்கு டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆயிஷா முகர்ஜி இன்ஸ்டாகிராமில் விவாகரத்தை உறுதி செய்த 24 மணி நேரத்தில் ஷிகார் தவானுக்கு அடுத்த சோக செய்தியாக இது அமைந்தது.

Related Stories: