போலீசாரின் குறைகேட்டு, நிவர்த்தி செய்ய போலீஸ் ஆணையம் அமைக்க வேண்டும்!: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: போலீசாரின் குறைகேட்டு, நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கரூரை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை காவலர் மாசிலாமணி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. போலீசாருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 3 ஷிப்ட்டில் பணிபுரிய அனுமதி தர வேண்டும். கருணை தொகை மற்றும் உதவி தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>