×

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் நிலவி வரும் சூழல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஓன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தெரிவிப்பதாவது: ஒன்றிய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
 கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சென்னை, திருவள்ளூரில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலோர பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலத்தில் ஓரிரு இடங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, செப்டம்பர் 12, 13ம் தேதிகளில் கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஒன்றிய, தெற்கு அந்தமான் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. மேலும், செப்டம்பர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை வங்கக்கடலில் ஒன்றிய, ஒடிசா மேற்கு, வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும். அரபிக்கடலில் தென்மேற்கு, ஒன்றிய மேற்கு பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Rain, Weather Center, Info
× RELATED மோடி அலை எதுவும் இல்லை, விஷம்தான் பரவியுள்ளது: காங்கிரஸ் விமர்சனம்