மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 அடியில் இருந்து 75.76 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 அடியில் இருந்து 75.76 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,145 கனஅடியில் இருந்து 11,019 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 37.86 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. மேலும், டெல்டா பாசனத்துக்கு திறக்கும் நீர் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக உள்ளது.

Related Stories:

>