எழும்பூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் 93 வழக்குகளில் தீர்வு 75 லட்சம் பைசல்

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 93 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.75 லட்சம் பைசல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய லோக் அதாலத் நடந்தது. வங்கிகள் மற்றும் வங்கி கடன் தொடர்பான 155 வழக்குகள் இந்த லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 93 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. அதன்படி ரூ.75 லட்சம் பைசல் செய்யப்பட்டது. நேற்று மட்டும் உடனடியாக ரூ.70 லட்சம் அதாலத்தில் வங்கிகளுக்காக செலுத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் கோதண்டராஜ், கூடுதல் மாஜிஸ்திரேட் கிரிஜா ராணி, இந்தியன் வங்கி அதிகாரி ராஜேஸ்வர ரெட்டி, வடக்கு மண்டல துணை பொது மேலாளர் திருமாவளவன் மற்றும் அதிகாரிகள் சசிகுமார் கர்தாஸ், கணேஷ், தெற்கு மண்டல துணை பொது மேலாளர் அன்பு காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: