×

சட்டப்பேரவைக்கு 3 நாள் விடுமுறை

தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜ), ஜவாஹிருல்லா (மமக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்டவர்கள் பேசினர். இவர்களின் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் திங்கட்கிழமை (13ம் தேதி) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அதன்படி தமிழக சட்டப்பேரவைக்கு 3 நாள் விடுமுறையாகும். இன்று (வெள்ளி) விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையாகும். நாளை (சனி), நாளை மறுநாள் (ஞாயிறு) அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், காவல் மற்றும் தீயணைப்பு ஆகிய மானிய கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

அதைத்தொடர்ந்து திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள மேலாண்மை துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் உள்ளிட்ட ஏனைய அரசியல் அலுவல்கள் குறித்து விவாதிக்கப்படும். இதையடுத்து 13ம் தேதி (திங்கள்) மதியத்திற்கு மேல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட உள்ளது.

Tags : 3 days leave for legislators
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...