×

இந்திய அணிக்கு தோனி ஏன் திடீர் ஆலோசகர்

அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் அஷ்வினுக்கு டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது. அந்த ஆச்சர்யம் போதாது என்று உலக கோப்பை அணிக்கான ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமித்து இன்னொரு ஆச்சர்யத்தையும் பிசிசிஐ தந்துள்ளது. ஏற்கனவே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கூடவே கேப்டன் விராத் கோஹ்லி  இருக்கும் போது  எதற்கு ஆலோசகர் என்ற கேள்வி கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் மத்திய சுற்றி சுழலுகிறது.

டி20 ஆட்டங்களை பொருத்தவரையில் தோனியை விட கோஹ்லிதான் வெற்றிகரமான கேப்டன். தோனி 72 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்து 59.23 சதவீத வெற்றிகளை பெற்றுள்ளார். ஆனால் கோஹ்லி 45 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்து 65.11சதவீத வெற்றியை வசப்படுத்தியுள்ளார். எனினும் டி20, ஒருநாள், டெஸ்ட் உலக கோப்பைகள் ஒன்றை கூட கேப்டன் கோஹ்லி தலைமையிலான அணி வெல்லவில்லை. ஆனால் தோனி தலைமையிலான அணி ஒருநாள், டி20, சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. தோனி கேப்டனாக இருந்த போது டெஸ்ட் உலக கோப்பை கிடையாது.

ஆக வெற்றிகரமான கேப்டனாக இருந்தாலும், கோப்பை வெல்லும் கேப்டனாக கோஹ்லி இல்லை. அதிகம் ஆவேசப்படும் கோஹ்லி முக்கிய தருணங்களில் கோட்டை விட்டு விடுகிறார். அவரை வழி நடத்த வேண்டிய ரவி சாஸ்திரி கோஹ்லியின் முடிவுகளுக்கு உடன் படுகிறார். காரணம் கோஹ்லியின் விருப்பம், கட்டாயத்தினால்தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். எனவே இரண்டு பேரையும் கண்காணிக்க, கூடுதல் ஆலோசனைகளை வழங்கதான் ‘அனுபவ’ தோனியை பிசிசிஐ நியமித்துள்ளது. அந்த முடிவையும் கோஹ்லி, ரவி சாஸ்திரி ஒப்புதலுடன் கங்குலி எடுத்ததாக பிசிசிஐ தரப்பில் சொல்லப்படுகிறது. எப்படியோ பலன் கிடைத்தால் போதும் என்பதே சராசரி ரசிகனின் எண்ணம்.

Tags : Dhoni ,Indian , Why Dhoni is a sudden advisor to the Indian team
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...