×

76 பழமையான சட்டங்கள் நீக்கம்: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் குறித்த சில இயற்சட்டங்கள் மிகவும் பழமையானதாக மற்றும் தேவைக்கு மேற்பட்டு இருப்பதனால் அந்த இயற்றுச்சட்டங்களை நீக்கறவு செய்வதற்கு அதன் பல்வேறு அறிக்கைகளில் பரிந்துரை செய்துள்ளது. மாநில சட்ட ஆணையத்தின் கூறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் இந்திய அரசின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மிகவும் பழமையான மற்றும் தேவைக்கு மேற்க்பட்டு இருக்கும் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கு அரசானது முடிவு செய்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி சட்டமசோதாவில் 76 பழமையான சட்டங்களை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

Tags : Bill ,Assembly , 76 Removal of old laws: Bill tabled in the Assembly
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை