ராஜா முத்தையா கல்லூரியில் படித்தவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் மூலம் பட்டம்: சட்ட மசோதா தாக்கல்

சென்னை: சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: 2020-21ம் கல்வி ஆண்டு வரை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகிய 3 கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட மற்றும் மாணவராக தொடர்கிறவர்களுக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் அல்லது பட்டயங்களை வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>